Enable Javscript for better performance
கொந்தகைப் பெருமாள் கோயிலில் நாளை புரட்டாசிப் பெருந்திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கொந்தகைப் பெருமாள் கோயிலில் நாளை புரட்டாசிப் பெருந்திருவிழா

    By மதுரை  |   Published on : 23rd September 2015 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி பெரிய திருவோணத்திருவிழா வியாழக்கிழமை நடைபெறுகிறது.

     மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில் சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் உள்ளது. சைவத் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பெருமாள் கோயில் இது ஒன்றேயாகும்.  புராண காலப் பெருமை மிக்க இத்திருக்கோயிலின் புரட்டாசி திருவோண (ஜென்ம நட்சத்திரம்) விழா வியாழக்கிழமை (செப்.24) நடைபெறுகிறது. அன்று பகல் 11.30 மணிக்கு சுவாமிக்கு விஷேச திருமஞ்சனமும், பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெறும். பின்னர் திருவாராதனம் தீர்த்த கோஷ்டியும், பிரசாதம் வழங்கலும் நடைபெறும்.

     மாலை 4 மணிக்கு அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராக தெய்வநாயகப் பெருமாள் கருடவாகனத்தில் திருவீதி உலா புறப்பாடு நடைபெறும்.  விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலரும், இணை ஆணையருமான நா.நடராஜன் செய்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai