Enable Javscript for better performance
டிவிஎஸ் - ஐடிஎப் டென்னிஸ்: முதல்சுற்று போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள்- Dinamani

சுடச்சுட

    

    டிவிஎஸ் - ஐடிஎப் டென்னிஸ்: முதல்சுற்று போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள்

    By மதுரை  |   Published on : 23rd September 2015 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் டிவிஎஸ் - ஐடிஎப் பியூச்சர்ஸ் சர்வதேச ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் முதல்சுற்று, இரட்டையர் காலிறுதி தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்தன.

     மதுரை யூனியன்கிளப் மைதானத்தில் இப்போட்டிகள் திங்கள்கிழமை துவங்கின.

      இந்தியா, பிலிப்பைன்ஸ், துர்க்மினிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 32 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். முதல் சுற்று போட்டிகள் கடந்த இருநாள்களாக நடைபெற்றது. ஒற்றையர் முதல் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்று 2 ஆம் சுற்றில் நுழைந்த 16 பேர் விவரம்: விஜய் சுந்தர் பிரசாந்த், இசா மமட்குல்யேவ், அபினவ் சஞ்சீவ் சண்முகம், ரோனிட் சிங் பிஸ்ட், சுனித் நாகல், நிகி கலியாண்ட பூனச்சா,சந்திரில் சூத், மோகித் மயூர் ஜெயப்பிரகாஷ், சசிகுமார் முகுந்த், சின்மய் பிரதான், ரிஷப்தேவ் ராமன், ரஞ்சித் விராலி முருகேசன், விநாயக்சர்மா காசா, ஜெயேஷ் பங்கிலியா, கோகுல் சுரேஷ்,விஷ்ணு வர்தன். இவர்களில் இசா மமட்குல்யேவ், துர்க்மினிஸ்தான் நாட்டு வீரர் ஆவார். மற்ற அனைவரும் இந்தியர்கள்.

       இரட்டையர் பிரிவில் முதல்சுற்றில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்ற ஜோடிகள்: ரோகன்பாட்டியா-அப்துல்லா சைக், வசிட் செருக்கு- சூரஜ் ஆர்.பிரதான், நீரஜ் இளங்கோவன், நிகி கலியாண்டா பூனசா, அனிருத் சந்திரசேகர்-விக்னேஸ் பெரணமல்லூர், இசா மமட்குல்யேவ் (துர்க்மினிஸ்தான்)- ஜெசன் பட்ரோம்பான் (பிலிப்பைன்ஸ்), அன்விட் பெண்டர்-ரோனிட் சிங் பிஸ்ட், சுனித்நாகல்-விஜய்சுந்தர் பிரசாந்த், மோகித் மயூர் ஜெயப்பிரகாஷ்-விநாயக் சர்மா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai