Enable Javscript for better performance
டெங்கு தடுப்பு நடவடிக்கை: சுகாதாரத் துறையினருக்கு ஆட்சியர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    டெங்கு தடுப்பு நடவடிக்கை: சுகாதாரத் துறையினருக்கு ஆட்சியர் உத்தரவு

    By மதுரை  |   Published on : 23rd September 2015 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

    டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

    டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள், நல்ல தண்ணீரில் தான் உற்பத்தி ஆகின்றன. ஆகவே, வீடுகள், சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தொட்டிகள் மற்றும் பாத்திரங்களில் நீண்டநாள்கள் தண்ணீரைச் சேமித்து வைக்கும்போது நன்றாக மூடி வைக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள், டயர், தேங்காய் ஓடுகள், உடைந்த மண்பாண்டங்கள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி, அவற்றில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தினார். பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வ அமைப்பினர் மூலமாக டெங்கு காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார்.

     சுகாதாரத் துறையினர், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் மற்றும் களப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

     மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பழனிசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குணசேகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai