Enable Javscript for better performance
தமாகா சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மதுரை மாவட்ட நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டனர்.

       மதுரை மாவட்ட தமிழ் மாநிலக் காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் சிறுபான்மைப் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சிறுபான்மைப் பிரிவின் மாநிலத் தலைவர் அமீர்கான் தலைமை வகித்தார். கூட்டத்தில் மதுரை மாவட்ட தமாக சிறுபான்மைப் பிரிவுத் தலைவராக ஷாகுல்ஹமீது, மாநிலத் துணைத் தலைவராக கல்வத்நூர்தீன், நாஞ்சில் ஜோசப், பொதுச்செயலராக சையதுகுரோஜி, ரெகாபத் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டனர்.

        கூட்டத்தில் தமாகா மாநகர் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் பி.சேதுராமன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு மற்றும் மாநிலப் பொதுச்செயலர் மைதீன்பாஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மது விலக்கு கையெழுத்தியக்கத்தை தீவிரப்படுத்துவது குறித்து விளக்கிப் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai