Enable Javscript for better performance
தேசிய மாணவர் படை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கான தேசிய மாணவர் படை முகாம் நடைபெறுகிறது.

     திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் தங்கராஜ் தலைமையில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. எரிவாயு உருளை பயன்படுத்தும் முறை, தீப்பற்றினால் காப்பாற்றும் முறை, கிணற்றில் விழுந்தவரை காப்பாற்றும் முறைகளை செய்து காண்பித்தனர்.

     முகாமுக்கு கமாண்டன்ட் கர்னல் திணேஷ், அரவிந்த் கவுசிஸ் தலைமை வகித்தனர். பல்வேறு கல்லூரியிலிருந்தும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகள் டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai