Enable Javscript for better performance
நரபலி புகார் அளித்தவரிடம் போலீஸார் மீண்டும் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    நரபலி புகார் அளித்தவரிடம் போலீஸார் மீண்டும் விசாரணை

    By மேலூர்  |   Published on : 23rd September 2015 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருகே கிரானைட் குவாரியில் மனநலன் பாதிக்கப்பட்டோர் நரபலியிடப்பட்டதாக புகார் அளித்தவரிடம் போலீஸார் மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.

     கிரானைட் குவாரியில்  நரபலியிடப்பட்டதாக புகார் அளித்த கீழவளவு வாச்சாம்பட்டியை சேர்ந்த சேவற்கொடியோனை போலீஸார் சம்மன் அளித்து வரவழைத்தனர். கீழவளவு காவல்நிலையத்தில் ஏடிஎஸ்பி மாரிமுத்து, டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது சட்ட ஆணையர் சகாயம் குழுவைச் சேர்ந்த ஆல்பர்ட், வழக்குரைஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் உடனிருந்தனர். நரபலி புகார் குறித்தும் பலியானவர் அடையாளம், எந்தத் தேதியில் நடந்தது என்பது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விப்பட்டியலை வைத்து விசாரித்தனர்.

    நரிக்குறவர்கள் புகார்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ரவி மனைவி ஜெயலலிதா, தனது கணவரைக் காணவில்லை என கீழவளவு போலீஸில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சாலையோரம் காட்டுவிலங்குகள் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்தை விற்றுக்கொண்டிருந்தார். அவரது வாகனம் சாலையோரம் நின்றது ஆனால் அவரைக் காணவில்லை, அவரைக் கடத்திச் சென்று நரபலியிட்டிருக்கலாம் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். போலீஸார் இதுகுறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai