Enable Javscript for better performance
நரபலி புகார்: சிபிஐ விசாரிக்க மார்க்சீய கம்யூ. வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நரபலி புகார்: சிபிஐ விசாரிக்க மார்க்சீய கம்யூ. வலியுறுத்தல்

    By மேலூர்  |   Published on : 23rd September 2015 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிரானைட் குவாரியில் நரபலியிடப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

     உயர் நீதிமன்ற சட்ட ஆணையர் உ.சகாயத்துக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும், கிரானைட் கொள்ளை குறித்து தீவிர நடவடிக்கை, நரபலி புகார் குறித்து சிபிஐ விசாரணையை வலியுறுத்தி மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேலூர் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராமகிருஷ்ணன் பேசியதாவது:

     1995 முதல் கிரானைட் குவாரிகளில் முறைகேடு தொடர்ந்து நடைபெற்றுள்ளது. திமுக, அதிமுக அரசுகள் இதை கண்டுகொள்ளவில்லை. தனிப்பட்ட கிரானைட் அதிபரால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும். நரபலி புகார் குறித்த சட்ட ஆணையரின் விசாரணைக்கு போலீஸார் முதலில் ஒத்துழைக்காதது கண்டிக்கத்தக்கது.

     மாநில போலீஸார் விசாரணையில் முழு உண்மையும் வெளிவரவாய்ப்பில்லை. எனவே, நரபலி புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்றார்.

     ஆர்பாட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமை வகித்தார். பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. என்.நன்மாறன், மதுரை புறநகர் மாவட்ட செயலர் ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்ட செயலர் விஜயராஜன், மேலூர் தாலுகா செயலர் கண்ணன் மற்றும் பலர் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai