மாநகராட்சி இணையத்தில் மிடுக்கான நகர் தகவல்கள்
By மதுரை | Published on : 23rd September 2015 02:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மதுரை மாநகராட்சி இணையதளம் புதுப்பிக்கப்பட்டு மிடுக்கான நகர் (ஸ்மார்ட் சிட்டி) தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மதுரை மாநகராட்சிக்கான தனி இணையம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிவைக்கப்பட்டது. மேலும், புதிய வீடு கட்டுவோருக்கான வரைபட அனுமதி உள்ளிட்ட சேவைகளும் இணையதளம் மூலம் கிடைக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால், நடைமுறையில் முழுமையாக அவை செயல்படுத்தப்படவில்லை என புகார் எழுந்தது. மாநகராட்சி இணையதளம் புதுப்பிக்கப்படாத நிலையில் பழைய தகவல்களே தொடர்வதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் மதுரையானது மத்திய அரசால் மிடுக்கான நகர்த் திட்ட மேம்பாட்டுக்காக தேர்வானது. இதையடுத்து சமீபத்தில் மதுரையில் செயல்படுத்தப்படவேண்டிய திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நடந்தது. இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை முதல் மாநகராட்சியின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு, அதில் மிடுக்கான நகர் திட்டம் குறித்த பல தகவல்களும் இடம் பெற்றுள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் கூறினர்.