Enable Javscript for better performance
ரயில்வே மருத்துவமனையில் உலக அல்சைமர் தினம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை ரயில்வே மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உலக அல்சைமர் தினம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

     உலகம் முழுவதும் செப்டம்பர் 22 ஆம் தேதி உலக அல்சைமர் (நினைவாற்றல் இழப்பு நோய்) தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு மதுரை ரயில்வே மருத்துவமனை வளாகத்தில் ரயில்வே மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கலந்துகொண்ட சிறப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

     மதுரை கோட்ட முதுநிலை மருத்துவக் கண்காணிப்பாளர் ஜி.சாஹூ தலைமை வகித்து, அல்சைமர் நோயின் பாதிப்புகள், உலகளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் சாதாரண மறதி நோய்க்கும் அல்சைமர் நோய்க்கும் இருக்கும் வேறுபாடுகள் குறித்துப் பேசினார். இதையடுத்து மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவில் உள்ள 15 முதியோருக்கு அல்சைமர் நோய் குறித்து மதுரை கோட்ட மூத்த மருத்துவ அதிகாரி ஆர்.பி.கணேஷ் விளக்கம் அளித்தார்.

     சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அலுவலர் கே.கிரிபிரகாஷ், மருத்துவ அதிகாரி ஏ.வேல்முருகன் மற்றும் 80-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai