Enable Javscript for better performance
அரசினர் மகளிர் பாலிடெக்னிக் மாணவியருக்கு இலவச மடிக்கணினி- Dinamani

சுடச்சுட

    

    அரசினர் மகளிர் பாலிடெக்னிக் மாணவியருக்கு இலவச மடிக்கணினி

    By மதுரை  |   Published on : 24th September 2015 06:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் மாணவியருக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.

    மேயர் வி.ராஜன்செல்லப்பா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவியருக்கு ரூ.30.28 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியது: முதல்வர் ஜெயலலிதா மாணவ, மாணவியருக்கு சீருடை முதல் மடிக்கணினி வரை 18 வகை இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம் எதிர்காலத்தில் தமிழகத்தில் வேலை வாய்ப்பு பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மாணவியர் வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் செ.கீதாஞ்சலி, துணை முதல்வர் பி.சுந்தரேஷ், உதவி ஆணையர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai