Enable Javscript for better performance
ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்

    By மதுரை  |   Published on : 24th September 2015 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேலைநிறுத்த ஆயத்தக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

     இந்தக் கூட்டத்துக்கு கூட்டு நடவடிக்கை குழுவின் தொடர்பாளர் மு.சந்திரன் தலைமை வகித்தார். இதில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பள்ளிகளில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளுக்கு நலத்திட்ட அலுவலரை நியமிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    அக்.8 ஆம் தேதி மாநில அளவில் நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. நிர்வாகிகள் ரமேஷ், ஆரோக்கியராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai