Enable Javscript for better performance
ஆண்டிபட்டி மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி

    By மதுரை  |   Published on : 24th September 2015 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வழக்கில் பாரபட்சம் காட்டியதாக ஆண்டிபட்டி மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

     தேனி மாவட்டம் மலையாண்டி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சீனிச்சாமி. ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் தாக்கல் செய்த மனுவில்,  ஆண்டிப்பட்டி கன்னியப்பன்பிள்ளைபட்டியில் உள்ள ஒரு வங்கியில் அடமானமாக வைத்திருந்த நகைகளை திரும்ப பெறுவதற்காக சென்றேன். அப்போது வங்கியின் கள அதிகாரி பூலோகசுந்தர் என்னைத் தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் பூலோகசுந்தரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அவரை காவலில் வைக்காமல், தேனி அரசு மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர் சேர்த்தார். அவரது சட்டவிரோத செயல்கள் குறித்து ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் தெரிவித்தேன். இதனால் பூலோகசுந்தருக்கு முதலில் மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்க மறுத்தார். ஆனால் 2 ஆவது முறை ஜாமீன் கோரிய போது பூலோகசுந்தருக்கு மாஜிஸ்திரேட் ஜாமீன் அளித்தார்.  எனவே,ஆண்டிப்பட்டி மாஜிஸ்திரேட்டு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

      இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு  முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் இல்லை என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai