Enable Javscript for better performance
கல்லூரியில் தமிழ் ஆய்வுக் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    தியாகராஜர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் மாணவர்களுக்கான மாநில அளவிலான ஆய்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் மு.எயினி தலைமை வகித்தார். காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர் ப.ஆனந்தகுமார், கவிதைகளின் நவீனப் போக்குகள் எனும் தலைப்பில் பேசியது: கடந்த 20 ஆண்டுகளில் கவிதைகளின் போக்கில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கலை உலகை மற்றுமே போற்றி வந்த கவிதைகள் குறைந்து, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும் கவிதைகள் அதிகளவில் எழுதப்பட்டன. உலகமயமாக்கல், விவசாய உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என அனைத்தும் கவிதை வடிவில் வெளிவந்தன. பெண் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பெண்ணிய சிந்தனைகள் அதிகரித்துள்ளன என்றார்.

    இதையடுத்து கவிதைகளின் நவீனப் போக்குகள் எனும் தலைப்பில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் சிவகாசி எஸ்.எப்.ஆர் கல்லூரியைச் சேர்ந்த ராஜலட்சுமி முதலிடமும், அதே கல்லூரியைச் சேர்ந்த பத்மபிரியா இரண்டாம் இடமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் மூன்றாமிடமும் பெற்றனர். தியாகராஜர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.கருணாமூர்த்தி, பேராசிரியர்கள் சரவண ஜோதி, கற்பகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai