Enable Javscript for better performance
சீட்டு நிறுவனம் நடத்தி  ரூ.2.85 லட்சம் மோசடி- Dinamani

சுடச்சுட

    

    சீட்டு நிறுவனம் நடத்தி  ரூ.2.85 லட்சம் மோசடி

    By வாடிப்பட்டி  |   Published on : 24th September 2015 06:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டம் சமயநல்லூரில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.2.85 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநெல்வேலியை சேர்ந்தவர் ராம்சுரேஷ். இவர் சமயநல்லூர் பகுதியில் ஜெயம் எண்டர்பிரைசஸ் மற்றும் லக்கி ஸ்டார் மார்க்கெட்டிங் என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தாராம். மேலும் பகுதிவாரியாக முகவர்களையும் நியமித்துள்ளார். இதில் தோடநேரியை சேர்ந்த பிரபகரன் என்பவர் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் ரூ.2,85,000 வசூல் செய்து ராம்சுரேஷிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ராம்சுரேஷ் அலுவலகத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டாராம். இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai