Enable Javscript for better performance
செப்.26-இல் திருமங்கலத்தில் மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    துணைமின்நிலையப் பராமரிப்புப் பணிக்காக வரும் 26-ஆம் தேதி திருமங்கலம் பகுதியில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     இதுகுறித்து திருமங்கலம் மின்பகிர்மானப் செயற்பொறியாளர் எஸ்.மகாராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வரும் சனிக்கிழமை (செப்.26) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

     ஆகவே சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:

    திருமங்கலம் நகர் பகுதிகள், உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி.

    தே.கல்லுப்பட்டி: வரும் 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தே.கல்லுப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

     ஆகவே அன்றையதினம் காலை 9 மணி முதல் பிற்பகல் வரை 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: குன்னத்தூர், பேரையூர், காடனேரி, எம்.சுப்புலாபுரம், பாப்பையாபுரம், எஸ்.அரசபட்டி, சந்தையூர், கீழப்பட்டி, மேலப்பட்டி, சாப்டூர், அத்திபட்டி, அனைக்கரைப்பட்டி, வில்லூர், கள்ளிக்குடி, புளியம்பட்டி, புளியங்குளம், வையூர், சென்னம்பட்டி, ஆவல்சூரன்பட்டி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai