Enable Javscript for better performance
தனியார் நிதி நிறுவன முறைகேட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் நிதி நிறுவன முறைகேட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

    By மதுரை  |   Published on : 24th September 2015 06:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் நிதி நிறுவனத்தின் முறைகேட்டைக் கண்டித்து மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

     பழங்காநத்தம் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தொடங்கி வைத்துப் பேசினார். இத்தகைய மோசடி நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் செலுத்திய பணம் திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

     முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

     தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு பல கிளைகளுடன் செயல்படும் இந்த நிதி நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். முதலீட்டாளர்கள் பெரும்பாலானோருக்கு முதிர்வுத் தொகையை அந்த நிறுவனம் வழங்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய முதிர்வுத் தொகையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai