Enable Javscript for better performance
தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசித் திருவிழா தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசித் திருவிழா தேரோட்டம்

    By மதுரை  |   Published on : 24th September 2015 06:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருள்மிகு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் புரட்டாசி பெருந்திருவிழாத் தேரோட்டம் வியாழக்கிழமை (செப்.24) காலை நடைபெறுகிறது.

     அழகர்மலை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் உபகோயிலாக மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்னவெங்கடாஜலபதி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் புரட்டாசிப் பெருந்திருவிழா கடந்த 16-ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், பிராட்டியார்களுடன் அருள்பாலித்து வருகிறார். புதன்கிழமை காலையில் வெண்ணைத் தாழி அலங்காரத்திலும், மாலையில் குதிரை வாகனத்தில் பெருமாள் பிராட்டியார்களுடன் எழுந்தருளி அருள்பாலித்தார். வியாழக்கிழமை காலையில் பெருமாள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தின் போது அப்பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்படும்.

     வியாழக்கிழமை இரவில் பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருள்கிறார். வெள்ளிக்கிழமை காலை தீர்த்தவாரியும், இரவு சப்தாவரணத்திலும் பெருமாள் எழுந்தருள்கிறார். சனிக்கிழமை மாலையில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai