Enable Javscript for better performance
திருச்செந்தூரில் தங்கரதம் இழுக்க தடை  செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் தங்கரதம் இழுக்க தடை  செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

    By மதுரை  |   Published on : 24th September 2015 06:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் தங்கரதம் இழுக்க தடையாக இருப்பவர்கள் மீது கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர்,வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

     மனுவில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுக்கும் நடைமுறை இருந்து வருகிறது. தங்கரதம் இழுக்க திரிசுதந்திரர்கள் எனப்படும் ஊழியர்கள் பணியில் உள்ளனர். ரதம் இழுக்க ஒரு ஊழியருக்கு ரூ.62.50 வழங்கப்படுகிறது. ஆனால் ஊதிய உயர்வு பிரச்னை காரணமாக இவர்கள் 2014 மே 29 இல் இருந்து 3நாள்கள் தங்கரதம் இழுக்கவில்லை. இது பக்தர்களின் மனதை  வேதனைப்படுத்தியுள்ளது. தேரோட்டம் இல்லையென்றால் நீரோட்டம் இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.  எனவே தங்கரதம் இழுக்க மறுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்துசமய அறநிலையத்துறை செயலர், ஆணையர், கோயில் இணை ஆணையர் ஆகியோருக்கு புகார் செய்த போதும் நடவடிக்கை இல்லை. எனவே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்க ரதத்தை தினமும் இழுக்கவும் உத்தரவிடவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.

     இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், கோயிலில் பாரம்பரிய முறைப்படி பூஜைகளை நடத்துவது கோயில் நிர்வாகத்தின் கடமையாகும். அதற்கு தடையாக யார் இருந்தாலும் அவர்கள் மீது சட்டத்துக்கு உள்பட்டு கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் எனக்குறிப்பிட்டு மனு மீதான விசாரணையை முடித்து வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai