Enable Javscript for better performance
தொழிலதிபர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தொழிலதிபர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி: ஒருவர் கைது

    By மதுரை  |   Published on : 24th September 2015 06:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை பெருங்குடியில் தொழிலதிபர்களுக்கு பூஜை செய்வதாகக்கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஒருவரைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

     பெருங்குடி விருசமரத்து ஊருணி பகுதியைச் சேர்ந்தவர் இன்பக்கண்ணன் (52). இவர் காளி சிலையை வைத்து பூஜை செய்து வருகிறார். மேலும், தொழிலதிபர்களிடம் சென்று ஜோதிட முறைப்படி சிறப்புப் பூஜைகள் செய்தால் செல்வம் பெருகும் என ஆசை வார்த்தை கூறிவந்துள்ளார்.

     இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சியைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.15 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகப் புகார் எழுந்தது. மேலும், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நரியூத்தைச் சேர்ந்த ரவிகுமாரிடம் கடந்த ஜூலையில் ரூ.25 ஆயிரம், பெரியகுளம் மேல்மங்களத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வனிடம் ரூ.85 ஆயிரம் வாங்கி ஏமாற்றியதாக இன்பக்கண்ணன் மீது புகார் கூறப்பட்டது.

     ரவிகுமார், செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் அளித்த புகாரின்படி இன்பக்கண்ணனை பெருங்குடி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏராளமானோருக்கு அவர் பூஜை செய்வதாகக் கூறி பணம் வசூலித்து ஏமாற்றியது தெரியவந்தது.  திண்டுக்கல் நாகல்நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் ரூ.1.10 லட்சம் வாங்கி இன்பகண்ணன் ஏமாற்றியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai