Enable Javscript for better performance
நேதாஜி மரணம் பற்றி அவதூறு: சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    நேதாஜி மரணம் பற்றி அவதூறு: சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

    By மதுரை  |   Published on : 24th September 2015 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நேதாஜி மரணம் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது நடவடிக்கை கோரும் மனுவுக்கு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்ததரவிட்டது.

      விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் அழகுமீனா. பாரதீய சுபாஷ் சேனா அமைப்பின் மாநில அமைப்பாளரான இவர் தாக்கல் செய்த மனு:

    கடந்த ஜனவரி 11 ஆம் தேதி, சுப்பிரமணிய சுவாமி  அளித்த பேட்டி வெளியானது. அதில்  சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்றும், அவர் ரஷ்யாவில் 1953 ஆம் ஆண்டு சைபீரியா சிறையில் தூக்கிலிடப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு தெரியும் என்றும் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். நேதாஜி மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையம் விமான விபத்தில் தான் நேதாஜி இறந்தார் என அறிக்கை அளித்துள்ளது. மேலும், 1967 ஆம் ஆண்டு வரை நேதாஜி உயிருடன் இருந்ததற்கான ஆவணங்கள் இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். எனவே நேதாஜி புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் சுப்பிரமணியன் சுவாமி அவதூறான தகவலைத் தெரிவித்துள்ளார். இது இரண்டு நாடுகள் இடையிலான உறவை பாதிக்கும். எனவே சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அளித்தேன்.

     போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் சுப்பிரமணிய சுவாமி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

     இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு அரசுத் தரப்பில் இருந்து விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை செப்.29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai