Enable Javscript for better performance
பக்ரீத் பண்டிகை: அஇமூமுக வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    

    பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் ந.சேதுராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: பொறுமை, தூய்மை, தியாகம் ஆகியவற்றை அனைத்துத் தரப்பு மக்களும் மதிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இறைதூதர் நபிகள் நாயகம் போதித்த, சமாதானம், சகோதரத்துவத்தை சிந்திக்க வேண்டிய நேரம் இந்த பக்ரீத் பெருநாள். இந்நாளில், மறைந்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் காட்டிய அறவழியில் சமூக நல்லிணக்கம் மலர சூளுரை ஏற்போம் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai