Enable Javscript for better performance
பெயிண்டர் குத்திக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் செவ்வாய்க்கிழமை பெயிண்டர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

      மதுரை சோலையழகுபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (45). பெயிண்டர். இவருக்கு 2 மகள்கள். இவரது தாய் செல்லூர் பாக்கியநாதபுரம் பகுதியில் வசித்துவருகிறார்.

      இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாய் வீட்டுக்கு பாலமுருகன் சென்றுள்ளார். அங்கு, அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது, 4 பேர் கும்பல் வந்து கதவைத் தட்டியுள்ளனர்.  

    பாலமுருகன் தாய் கதவை திறந்துள்ளார். அச்சமயம் வீட்டுக்குள் புகுந்த அந்த கும்பல் பாலமுருகனை சரமாரியாக குத்திக்கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

     தகவலறிந்த செல்லூர் போலீஸார் விரைந்து சென்று பாலமுருகன் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

     இதுகுறித்து போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பாலமுருகன் மகளை திருமணம் செய்யும் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

    மேலும், இதுதொடர்பாக 4 பேரைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai