Enable Javscript for better performance
மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கிய விழா- Dinamani

சுடச்சுட

    

    பாத்திமா கல்லூரி ஆங்கில உயராய்வு மையம் சார்பில் ஆங்கில இலக்கிய விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

     கல்லூரி முதல்வர் பாத்திமா மேரி தலைமை வகித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைப் பேராசிரியர் லாராமரிஸ் செல்லஜோதி விழாவை தொடக்கி வைத்து ஆப்பிரிக்க-அமெரிக்க இலக்கியம் பற்றி உரையாற்றினார். 14 கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    இதில் தனிப்பாடல், நடனம் உள்ளிட்ட 9 வகையான போட்டிகள் நடைபெற்றன. மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் முதலிடமும், சிவகாசி கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடமும், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு கலைக்கல்லூரி மாணவிகள் மூன்றாம் இடமும், நான்காம் இடத்தை பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியும், விருதுநகர் வி.வி.வன்னியபெருமாள் கல்லூரியும் பகிர்ந்துகொண்டன.

    பாத்திமா கல்லூரி ஆங்கில உயராய்வு மையப் பேராசிரியர்கள் ரோஸ்லின் மேரி, அருணா, ரீனு மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai