Enable Javscript for better performance
மதுரையில் ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம்- Dinamani

சுடச்சுட

    

    திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே சுற்றுப்பயணம் மதுரை மாவட்டத்தில் வரும் வெள்ளி, சனி இருநாள்கள் நடைபெற உள்ளது.

     மதுரை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற  உள்ள சுற்றுப்பயணம் குறித்து சட்டப்பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக மதுரைக்கு வெள்ளிக்கிழமை வருகை தருகிறார். மதுரை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பொதுமக்களைச் சந்திக்கவுள்ளார்.

      வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு அவனியாபுரத்தில் தொடங்கும் பயணம் திருப்பரங்குன்றம் ஒக்கலிக்கர் காப்பு திருமண மண்டபம், திருமங்கலம் ஆட்டு சந்தை, நக்கலக் கோட்டை, உசிலம்பட்டி நகர், செக்கானூரணி, சோழவந்தான், அலங்காநல்லூர், ஊமச்சிகுளம், வண்டியூர், யா.ஒத்தக்கடை ஆகிய இடங்களில் மக்களைச் சந்தித்து மேலூரில் பயணத்தை நிறைவு செய்கிறார் என்றார்.

     புறநகர் மாவட்டச் செயலர்கள் பி.மூர்த்தி (வடக்கு), எம்.மணிமாறன் (தெற்கு ஆகியோர் உடன் இருந்தனர். மாநகர் மாவட்ட சுற்றுப் பயணம் குறித்து மாவட்டச் செயலர்கள் வ.வேலுசாமி (வடக்கு), கோ.தளபதி (தெற்கு) ஆகியோர் கூறியது:

      மதுரை மாநகரப் பகுதியில் கே.கே.நகர் வண்டியூர் கண்மாய் பூங்கா பகுதியில் பயணத்தைத் தொடங்குகிறார். மாவட்ட நீதிமன்றம் எதிரே உணவகத்தில் பொதுமக்களுடன் பேசுகிறார். பின்னர் பீ.பீ.குளத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் உரையாடுகிறார். செல்லூர் 50 அடி சாலை, கே.கே.நகர் (வேலாயுத நாடார் மகாலில் மாணவர்களுடன் உரையாடல்), தெப்பக்குளம் (பேருந்து பயணிகளுடன் உரையாடல்), காமராஜர் சாலை தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு கட்டடத்தில் கலந்துரையாடல், முனிச்சாலை, பாலரெங்காபுரம் (நெசவாளர்களுடன் உரையாடல்), சிஎம்ஆர் சாலை, ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர் (அப்பள தொழிலாளர்களுடன் சந்திப்பு), நகைக்கடை பஜார், காமராஜர் சாலை சந்திப்பு, கூடலழகர் பெருமாள் கோயில், வைத்தியநாதபுரம், ஆரப்பாளையம் வழியாக சிம்மக்கல் பகுதியில் பயணத்தை நிறைவு செய்கிறார் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai