Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.

    மதுரை அரசரடியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (33). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இளங்கோவன் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு நேர்காணலுக்கு செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார்.

    திருமங்கலத்துக்கு வந்த அவர் கப்பலூர் சுங்கச்சாவடிக்கு அருகில் பேருந்துக்கு காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சுங்கச்சாவடிக்கு பின்புறம் உள்ள கோயில் பகுதியில் மின்வயர் அறுந்து கிடந்துள்ளது. இளங்கோவன் மின்கம்பியை இருட்டில் தவறுதலாக மிதித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai