Enable Javscript for better performance
விசாரணை அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் சாலைமறியல்- Dinamani

சுடச்சுட

    

    விசாரணை அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் சாலைமறியல்

    By உசிலம்பட்டி  |   Published on : 24th September 2015 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உசிலம்பட்டியில் முடிதிருத்துவோர் 74 குடும்பத்தினருக்கு அரசு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுதுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு முடிதிருத்துவோர் குடும்பத்தினருக்கு உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தகவல் தரப்பட்டதாம்.

      இதையடுத்து அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை முதலே காத்திருந்தனர். ஆனால் விசாரிக்க யாரும் வரவில்லையாம். அலுவலக பணியாளர்களை கேட்டால் முறையான பதிலும் தரப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்தபின் விசாரணை நடத்தப்படும் என உறுதி கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai