வீட்டுக்கு வர்ணம் பூசியவருக்கு பணம் கொடுக்காதவர்கள் மீது வழக்கு
By திருமங்கலம் | Published on : 24th September 2015 06:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருமங்கலம் மறவன்குளத்தைச் சேர்ந்தவர் பி.பேச்சிமுத்தன்(57). வீடுகளுக்கு வர்ணம் பூசும் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் திருமங்கலம் புதுநகரைச் சேர்ந்த நவநீதன், செந்தில்குமார் ஆகியோர் வீடுகளுக்கு வர்ணம் பூச ரூ.6.21 லட்சம் பேசி, ரூ.3.94லட்சம் கொடுத்துள்ளனர். மீதத்தொகை ரூ.2.27லட்சத்தை 10 மாதங்கள் கழித்து கொடுப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் கூறிய மாதங்களும் கடந்து விட்டதால் பேச்சிமுத்தன் பணம் கேட்டுள்ளார். ஆனால் நவநீதன், செந்தில்குமார் இருவரும் பணத்தை தராமல் இழுத்தடித்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். பேச்சிமுத்தன் கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் நகர் போலீஸார் நவநீதன், செந்தில்குமார் இருவரையும் தேடி வருகின்றனர்.