Enable Javscript for better performance
10 ஆண்டுக்கு முன் மாயமான மாணவரைத் தேடும் சிபிசிஐடி போலீஸார்- Dinamani

சுடச்சுட

    

    10 ஆண்டுக்கு முன் மாயமான மாணவரைத் தேடும் சிபிசிஐடி போலீஸார்

    By மதுரை  |   Published on : 24th September 2015 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ்வரனை  சிபிசிஐடி போலீஸார் தேடிவருகின்றனர்.

     மதுரை பாஸ்டின்நகர் இ.பி.காலனியில் வசிப்பவர் பன்னீர்செல்வம். காப்பீட்டுத் திட்ட முகவர். இவர் கடந்த 2005-இல் நாகமலைப்புதுக்கோட்டை பக்தவச்சலனார் தெருவில் வசித்து வந்தார். இவருக்கு 3 மகன்கள்.  மூத்த மகன் விக்னேஷ்வரன் (20). திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2005 ஆக.8-ஆம் தேதி வீட்டிலிருந்து சைக்கிளில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது சைக்கிள் மட்டும் அப்பகுதியிலிருந்த கடையில் நின்றது.

     மாணவர் மாயமானது தொடர்பாக நாகமலைப்புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து தேடினர். வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து வழக்கானது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.  சிபிசிஐடி பிரிவு ஆய்வாளர் ஆர்.கணேஷ்பிரபு தலைமையிலான தனிப்படையினர் மாயமான மாணவர் விக்னேஷ்வரன் குறித்து விசாரித்து வருகின்றனர். நாகமலைப் புதுக்கோட்டை பகுதியிலுள்ளவர்கள், சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த கடை உரிமையாளர், மாணவரின் நண்பர்கள் என பலரிடமும் விசாரிக்கப்பட்டது.

     மேலும், மாணவர் குறித்து தகவல் தெரிந்தால் சிபிசிஐடி அலுவலகம் மற்றும் அதிகாரிகள் செல்லிடப் பேசி எண்கள் 9042772633, 9498183951 ஆகியவற்றில் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai