Enable Javscript for better performance
அபின் கடத்தியவருக்கு  3 ஆண்டு சிறைத் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    அபின் போதைப்பொருள் கடத்திய ராமேசுவரம் இளைஞருக்கு மதுரை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

     சென்னையில் இருந்து மதுரை வழியாக ராமேசுவரத்துக்கு அபின் போதைப்பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்காணித்தனர். இதையடுத்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் பேருந்துகள் வெளியே செல்லும் வாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த, ராமேசுவரத்தைச் சேர்ந்த சேதுராஜா என்பவரது மகன் ஜெயக்குமார் (41) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவரிடம் இருந்து 1 கிலோ 600கிராம் போதைப்பொருளை போலீஸார் கைப்பற்றினர். அவரைப் போலீஸார் கைது செய்தனர். 2005 ஆக.2 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது. சென்னை பகுப்பாய்வு நிலையத்துக்கு அந்த போதைப் பொருளை பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், ஓபியம் எனப்படும் அபின் போதைப்பொருள் எனத் தெரியவந்தது. இவ்வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.வி.செந்தூர் பாண்டியன், கைதான ஜெயக்குமாருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai