Enable Javscript for better performance
ஈஷா தியான மண்டபம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை திருமலைநாயக்கர் மகால் அருகே சத்குரு சந்நிதி என்ற பெயரில் ஈஷா யோக மையத்தின் தியான மண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

      இங்கு ஈஷா தியான அன்பர்கள் அன்றாடம் யோகப்பயிற்சி செய்வதற்கும், உயிர் நோக்கம், உபயோகா, ஈஷா யோகா வகுப்புகள் நடத்துவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

     ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தியான மண்டபம் திறந்திருக்கும். ஈஷா தயாரிப்புகள், சத்குரு ஜக்கி வாசுதேவின் புத்தகங்கள், டிவிடி, ஈஷா ருச்சி பொருள்கள் இங்கு கிடைக்கும். சத்குரு சந்நிதி, சுகந்தி பில்டிங், எண்:5 மஹால் 7-ஆவது தெரு, மதுரை - 1 என்ற முகவரியில் இந்த தியான மண்டபம் அமைந்துள்ளது. தியான மண்டபம் தொடர்பான விவரங்களுக்கு 83000-59000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai