Enable Javscript for better performance
கணினி திருட்டு: 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் கணினி கடையில் திருடியதாக 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

     மதுரை பொன்மேனி ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (45). இவர் அப்பகுதியில் கணினி கடை வைத்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி இரவு கடையைப் பூட்டியவர் மறுநாள் பார்த்தபோது மேற்கூரை மூலம் உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.1.35 லட்சம் மதிப்புள்ள கணினிகள், கணினி திரைகள் மற்றும் கண்காணிப்புக் கேமரா உள்ளிட்டவற்றைத் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி குற்றப்பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

     விசாரணை அடிப்படையில் கணினிக்கடையில் திருடியதாக எல்லீஸ்நகர் போடிலைனைச் சேர்ந்த ஆனந்தகணேஷ் (22), பழங்காநத்தத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (25), சம்மட்டிபுரம் அர்ஜுன் (24), பிரேம் (23) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அனைத்துப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai