Enable Javscript for better performance
கண்மாயில் மணல் கடத்தல்:  2 டிப்பர் லாரிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கண்மாயில் மணல் கடத்தல்:  2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

    By மேலூர்  |   Published on : 25th September 2015 06:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொட்டாம்பட்டி அருகே கண்மாயை ஆழப்படுத்தும் பணியில் கரம்பை மண்ணை கடத்திச்சென்ற 2 டிப்பர் லாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரையை சேர்ந்த தொண்டு நிறுவனம் கச்சிராயன்பட்டி கண்மாயை ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்பணியில் ஈடுபட்டிருந்த கச்சிராயன்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவர், அவருக்கு சொந்தமான இரு டிப்பர் லாரிகளில் கரம்பை மண்ணை அள்ளிச்சென்று விற்பனை செய்வதாக மேலூர் வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.

        இதன் பேரில், வட்டாட்சியர் கிருஷ்ணன் அலுவலர்களுடன் சென்று சோதனையில் ஈடுபட்டார்.  அப்போது மணல் ஏற்றிச்சென்ற இரு லாரிகளை கைப்பற்றி, மேல்நடவடிக்கைக்கு வருவாய்க் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai