கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்
By வாடிப்பட்டி | Published on : 25th September 2015 06:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மதுரை அருகே பாசனக்கால்வாயில் குளிக்கச்சென்ற ஜல்லிக்கட்டு வீரரை தண்ணீர் அடித்துச்சென்றதில் மாயமானார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் அமுல்ராஜ்(28). ஜல்லிக்கட்டு வீரர். இவர் வியாழக்கிழமை பெரியாறு பாசனக்கால்வாயில் குளிக்கசென்றபோது தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார்.
அங்குள்ளவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில், பாசனக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டு, அமுல்ராஜை தேடும் பணியில் வாடிப்பட்டி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.