Enable Javscript for better performance
கிரானைட் குவாரி நரபலி விவகாரம்: மாயமான 4 பேரின் குடும்பத்தினர்  புகார்- Dinamani

சுடச்சுட

    

    கிரானைட் குவாரி நரபலி விவகாரம்: மாயமான 4 பேரின் குடும்பத்தினர்  புகார்

    By மேலூர்  |   Published on : 25th September 2015 06:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என  மனநலம் பாதிக்கப்பட்டு மாயமான 4 பேரின் குடும்பத்தினர் கீழவளவு போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம், ஜெயங்கொண்டநிலையை சேர்ந்த பெரி.அம்பலம் மனைவி எலுவக்காள், கீழவளவு போலீஸில் வியாழக்கிழமை அளித்துள்ள புகாரில், எனது மகன் ராதா மனநலம் பாதிக்கப்பட்டவர். 2009 ஜூன் முதல் காணவில்லை. எங்கள் வீட்டிற்கு அருகிலேயே பி.ஆர்.பி. கிரானைட் குவாரி செயல்பட்டுவந்தது. குவாரியிலுள்ள உணவகத்தில் எனது மகன் அவ்வப்போது சாப்பிடச்செல்வது வழக்கம்.

    இந்நிலையில், இ.மலம்பட்டி மயானத்தில் நரபலி புகாரின்பேரில் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. எனது மகனையும் குவாரியில் நரபலி கொடுத்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது எனத்தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, திருப்பத்தூர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ஜெயலலிதா, தனது கணவர் ரவியை காணவில்லை என கீழவளவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

    மேலும், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் தனது சகோதரர் பழனிவேலைக் காணவில்லை எனவும், அதேபகுதியைச் சேர்ந்த ஆயிஷாபீவி, தனது சகோதரன் கலிபுல்லாவை காணவில்லை எனவும் கீழவளவு போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

    இப்புகார்கள் குறித்து, மேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai