Enable Javscript for better performance
கோ-ஆப்டெக்ஸ் தங்க மழை திட்டம்: 40 பேருக்கு தங்க நாணயங்கள்: அமைச்சர் வழங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    கோ-ஆப்டெக்ஸ் தங்க மழை திட்டம்: 40 பேருக்கு தங்க நாணயங்கள்: அமைச்சர் வழங்கினார்

    By மதுரை  |   Published on : 25th September 2015 06:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோ ஆப்டெக்ஸ் தங்கமழை பரிசுத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 நபர்களுக்கு தங்க நாணயங்களை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா வழங்கினார்.

     கோ ஆப்டெக்ஸில் ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் ஜவுளி ரகங்கள் வங்குவோருக்கு பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, கோ ஆப்டெக்ஸின் மதுரை மண்டலத்தை உள்ளடக்கிய மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கோ ஆப்டெக்ஸில் தங்கமழை திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தங்க நாணயங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

     மதுரை வெங்கலக்கடைத்தெரு அங்கையற்கண்ணி கோ ஆப்டெக்ஸில் நடந்த விழாவில், முதல் பரிசாக 10 பேருக்கு தலா 4 கிராம் தங்க நாணயங்கள், இரண்டாம் பரிசாக 30 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயங்களை அமைச்சர் வழங்கினார்.

     விழாவின்போது அமைச்சர் கோகுல இந்திரா பேசியது: ஒவ்வொரு நெசவாளரும் தனது முழு உடல் உழைப்புடன் நெசவுப்பணியை மேற்கொள்கின்றனர். கோ ஆப்டெக்ஸில் வாங்கும் ஒவ்வொரு துணி ரகமும் நெசவாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்றார்.

     கைத்தறித் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai