Enable Javscript for better performance
சாமானியரிடம் தத்துவங்களை பரப்பியவர் தயானந்தசரஸ்வதி- Dinamani

சுடச்சுட

    

    சாமானியரிடம் தத்துவங்களை பரப்பியவர் தயானந்தசரஸ்வதி

    By மதுரை  |   Published on : 25th September 2015 06:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாமானிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஆன்மிக தத்துவங்களைப் பரப்பியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி என விஸ்வஹிந்து பரிஷத் மதுரை மாவட்டத்தலைவர் சின்மயா ஆர்.சோமசுந்தரம் கூறியுள்ளார்.

     இதுகுறித்து வியாழக்கிழமை அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வேதாந்த வித்தகரும், இமயமலை ஆர்ஷவித்யா ஆஸ்ரமம் ஸ்தாபகருமான சுவாமி தயானந்த சரஸ்வதி மகாசமாதி அடைந்தாலும், என்றென்றும் ஆன்மிகத்தில் நிலைத்து நிற்பார். அவரது தூலசரீர பிரிவுக்காக விஷ்வஹிந்து பரிஷத், இந்து மாணவர் சங்கம், கிராமக்கோயில்கள் பூஜாரிகளின் இயக்கம் வருந்துகின்றன.

     உலகம் போற்றும் அத்வைத குருவான அவர் விஸ்வஹிந்து பரிஷத் ஸ்தாபகர் சின்மயானந்தரின் சீடராவார். கீதை மற்றும் ஆன்மிக தத்துவங்களை சாமானியருக்கும் எடுத்துச்சென்றவர்.

     கோவை ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலம் மூலம் மலைசாதி, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி, ஆலோசனை வழங்கியவர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai