Enable Javscript for better performance
தல்லாகுளம் பெருமாள்கோயிலில் நாளை தெப்பத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    தல்லாகுளம் பெருமாள்கோயிலில் நாளை தெப்பத் திருவிழா

    By மதுரை  |   Published on : 25th September 2015 06:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருள்மிகு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் புரட்டாசி பெருந்திருவிழா சட்டத் தேரோட்டம் வியாழக்கிழமை நடந்த நிலையில், சனிக்கிழமை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

     அழகர்மலை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலின் புரட்டாசி பெருந்திருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

      விழாவின் முக்கிய நிகழ்வான சட்டத் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. தேரில் பெருமாள் பிராட்டியாருடன் எழுந்தருளினர். இரவில் நடைபெற்ற பூப்பல்லக்கில் எழுந்தருளிய பெருமாளை ஏராளமானோர் தரிசித்தனர்.

     வெள்ளிக்கிழமை  காலை தெப்பத்தில் தீர்த்தவாரியும், இரவில் சப்தாவர்ணம் தேர் மற்றும் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளலும் நடைபெறுகிறது.

      தெப்போற்சவம்: புரட்டாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையடுத்து கோயில் தெப்பத்தில் நீர் நிரப்பப்பட்டு, தெப்பம் அமைக்கப்பட்டுள்ளது.

     சனிக்கிழமை காலை 10.31 மணிக்கு மேலும், மாலை 6 மணிக்கு மேலும் சுவாமி பிராட்டியாருடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai