Enable Javscript for better performance
திருமங்கலத்தில் நிரந்தர சார்பு நீதிமன்றம்: வழக்குரைஞர்கள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலத்தில் நிரந்தர சார்பு நீதிமன்றம்: வழக்குரைஞர்கள் வரவேற்பு

    By திருமங்கலம்  |   Published on : 25th September 2015 06:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமங்கலத்தில் நிரந்தர சார்பு நீதிமன்றம் அமைக்க சட்டப்பேரவையில்  முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததற்கு திருமங்கலம் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை  இனிப்புகள் வழங்கி வரவேற்பு தெரிவித்தனர்.

    திருமங்கலத்தில் சார்பு நீதிமன்றம் தற்போது வாரத்தில் புதன்கிழமை மட்டும் செயல்பட்டு வருகிறது. வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், வாரத்தில் ஒருநாள் மட்டும் செயல்படும் சார்பு நீதிமன்றத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்று திருமங்கலம் வழக்குரைஞர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் திருமங்கலத்தில் ரூ.60 லட்சம் செலவில் நிரந்தர சார்பு நீதிமன்றம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்தார்.

    இதையடுத்து முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து திருமங்கலம் வழக்குரைஞர் சங்கத்தினர் சார்பு நீதிமன்றம் முன்பு வியாழக்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    இதில் அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலர் தமிழ்செல்வம், அரசு வழக்குரைஞர் அன்பழகன், திருமங்கலம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் சி.ராமசாமி, செயலர் கே.ஆர்.கேசவன், பொருளாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் எஸ்.சிவசாமி, இணைச்செயலர் ஜி.அடைக்கலம், திருமங்கலம் அதிமுக நகர் செயலர் ஜே.டி விஜயன், நகராட்சி துணைத்தலைவர் சதீஸ்சண்முகம் உள்பட 100 பேர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai