Enable Javscript for better performance
பக்ரீத் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத்தொழுகை- Dinamani

சுடச்சுட

    

    பக்ரீத் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத்தொழுகை

    By மதுரை  |   Published on : 25th September 2015 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.

      பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகை. இந்த பண்டிகை ஈகைப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. மதுரையில் இப்பண்டிகை வியாழக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றன. மதுரை அரசரடியில் உள்ள காஜிமார் ஈத்கா மைதானத்தில் அரசு தலைமை காஜியார் எம்.ஜி.மீர்முகமது ஹாதிரி சாஹிப் தலைமையில் சிறப்புத்தொழுகை நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் நூற்றுக்கணக்கானோர் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். தொழுகை முடிந்த பின்பு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். கோரிப்பாளையம் தர்கா பள்ளிவாசலில் இமாம் ஹாஜி ஷேக்மதார் தலைமையில் தொழுகை நடந்தது. சிம்மக்கல்லில் உள்ள மக்கா நிம் ஆ பள்ளிவாசலில் அதன் தலைவர் கே.ரசீத்அலி தலைமையில் தொழுகை நடந்தது. இதுபோன்று மதுரையில் தெற்குவாசல், அண்ணாநகர்  உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் தவ்ஹித் ஜமாத் அமைப்பு சார்பிலும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. வீடுகளில் பெண்கள் கூட்டாக சேர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சியை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai