Enable Javscript for better performance
பெயிண்டர் கொலை வழக்கு: 6 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

     மதுரை சோலையழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). பெயிண்டர். இவர் செவ்வாய்க்கிழமை இரவு பாக்கியநாதபுரத்தில் வசிக்கும் தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மர்மக்கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

     இதுகுறித்து செல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பால்பாண்டியின் மகள் காதல் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்தநிலையில் பாக்கியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (21), பாலமுருகன் (23), அழகுபாண்டி (19), செந்தமிழ்ச்செல்வன் (19), அழகர் (20), தத்தனேரி மாரி (20) ஆகியோரைக் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai