Enable Javscript for better performance
போலி பாஸ்போர்ட் புகார்: இலங்கை அகதி கைது- Dinamani

சுடச்சுட

    

    போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற அகதியை மதுரையில் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

     ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் செல்வகுமார் (27). இவர் இலங்கை செல்வதற்காக புதன்கிழமை மதுரை வந்துள்ளார்.

     அவரது பாஸ்போர்ட்டை மதுரை விமானநிலைய அதிகாரிகள் சோதனையிட்டபோது, வேறு நபருடைய பாஸ்போர்ட்டில் செல்வகுமார் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பெருங்குடி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. செல்வகுமாரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai