Enable Javscript for better performance
மன்னர் சேதுபதி சிலையை திறக்க கோரும் மனு: அரசுக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    மன்னர் சேதுபதி சிலையை திறக்க கோரும் மனு: அரசுக்கு நோட்டீஸ்

    By மதுரை  |   Published on : 25th September 2015 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தானில் நிறுவப்பட்டுள்ள மன்னர் சேதுபதி சிலையை திறக்கக்கோரும் மனுவுக்கு வருவாய்த்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

      ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் புதுமலர் பிரபாகரன். மறத்தமிழர் சேனை அமைப்பின் மாநில அமைப்பாளரான இவர் தாக்கல் செய்த மனு:

     மன்னர் சேதுபதி, ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடினார். இதன் காரணமாக தனது 28 ஆவது வயதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது வாழ்நாளில், பாதி நாள்களை சிறையில் கழித்தார். அவருக்கு அரசு சார்பில் முழு உருவச்சிலையை நிறுவக்கோரி எங்கள் அமைப்பின் சார்பில் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தோம்.

    இதையடுத்து 2010 இல் பட்டினம் காத்தானில் மன்னர் சேதுபதி சிலையை நிறுவ தமிழக வருவாய் துறைச்செயலர் அனுமதி அளித்தார். அதன்படி, குறிப்பிட்ட இடத்தில் சிலை நிறுவப்பட்ட்டது. ஆனால், சிலையை திறக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

       தற்போது வரை சிலை மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதனால், சிலையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர்  உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன்.

      பொது பயன்பாட்டுக்குரிய இடத்தில் சிலை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி சிலையை திறக்க அனுமதி மறுத்து கடந்த ஆக.26இல் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டார்.

    உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முன்னதாகவே மன்னர் சேதுபதி சிலையை நிறுவ தமிழக வருவாய்துறை செயலர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். இதை கருத்தில் கொள்ளாமல் சிலையை திறக்க ஆட்சியர் அனுமதி மறுத்தது நியாயமற்றது. எனவே, ஆட்சியர் உத்தரவை ரத்து செய்து,மன்னர் சேதுபதி சிலையை திறக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

      இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு தமிழக வருவாய்துறை செயலர், தமிழ் வளர்ச்சித்துறை செயலர், ராமநாதபுரம் ஆட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai