Enable Javscript for better performance
மிடுக்கான நகர்த் திட்டம்: 2 ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மிடுக்கான நகர்த் திட்டம்: 2 ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டம்

    By மதுரை  |   Published on : 25th September 2015 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் மிடுக்கான நகர்த்திட்டத்தில் செயல்படுத்தவேண்டியவை குறித்த 2 ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.25) மாலை நடைபெறுகிறது.

     இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் பொறுப்பு செ.சாந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மிடுக்கான நகர் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் மதுரையை தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிந்துரைத்தார். இதனால் தற்போது அத்திட்டத்தில் மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

     மிடுக்கான நகர்த் திட்டத்தின் கீழ் செயல்படுத்தவேண்டிய திட்டங்கள் குறித்து மக்கள் ஆலோசனையை கடந்த 14-ஆம் தேதி மாநகராட்சி நிர்வாகம் கேட்டறிந்தது. இந்நிலையில், மேலும் பொதுமக்கள் கருத்தைக் கேட்டறிவதற்காக மாமன்ற மேயர் வி.ராஜன் செல்லப்பா தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மடீட்சியா அரங்கில் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாது கலந்துகொண்டு திட்டத்தில் செயல்படுத்தவேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

     சாதனை பிரசுரம்: மதுரை மாநகராட்சியில் செயல்படுத்திய திட்டங்கள், அதிமுக அரசின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரத்தை வெள்ளிக்கிழமை காலையில் வார்டு வார்டாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் விநியோகிக்கவுள்ளனர். விளக்குத்தூணில்  மேயர் வி.ராஜன் செல்லப்பா விநியோகித்தை தொடக்கி வைப்பார் என மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai