Enable Javscript for better performance
15 பேர் தொழில் செய்வதற்கு தடை: விளக்கம் கோராமல் எடுத்த முடிவு: மதுரை வழக்குரைஞர்கள் கருத்து- Dinamani

சுடச்சுட

    

    15 பேர் தொழில் செய்வதற்கு தடை: விளக்கம் கோராமல் எடுத்த முடிவு: மதுரை வழக்குரைஞர்கள் கருத்து

    By மதுரை  |   Published on : 25th September 2015 06:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எவ்வித விளக்கமும் கோராமல் மதுரை வழக்குரைஞர்கள் 15 பேர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை சட்டப்படி எதிர்கொள்வோம் என மதுரை வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

         சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் 15 பேர் வழக்குரைஞர்களாகத் தொழில் செய்ய அகில இந்திய பார்கவுன்சில் தடை விதித்து உள்ளதாக வியாழக்கிழமை தகவல் வெளியானது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வழக்குரைஞர்கள் கூறியது: எங்களிடம் எந்த விளக்கமும் கோராமல் அகில இந்திய பார்கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தவறான நடவடிக்கையாகும். இதை சட்டப்படி எதிர்கொள்வோம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தான் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அவர்கள் எங்களை நீக்கினால் நாங்கள் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த பின்பே அதில் அகில இந்திய பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியும்.

           அதை விடுத்து அகில இந்திய பார்கவுன்சில் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. இதை தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சிலில் தெரிவித்து உரிய பரிகாரம் கோருவோம் என்றனர்.

      சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்குரைஞர்கள் கூறுகையில், தொலைக்காட்சி மூலம் தான் எங்கள் மீதான நடவடிக்கை தெரிய வந்துள்ளது. சங்க நிர்வாகிகள் பலரும் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.

       எந்த ஒரு விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது. வெள்ளிக்கிழமை இது தொடர்பாக சங்க பொதுக்குழு கூடி உரிய முடிவு மேற்கொள்ளும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai