Enable Javscript for better performance
அறிவிக்கப்படாத மின்வெட்டால் பாதிப்பு: மார்க்சிஸ்ட் கம்யூ. புகார்- Dinamani

சுடச்சுட

    

    அறிவிக்கப்படாத மின்வெட்டால் பாதிப்பு: மார்க்சிஸ்ட் கம்யூ. புகார்

    By மதுரை  |   Published on : 26th September 2015 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டத்தில் தினமும் 3 மணி நேரத்துக்கு மேல் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதால் பொதுமக்கள், தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலர் சி.ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் தினமும் 4 மணி நேரமும், நகரப் பகுதிகளில் 3 மணி நேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே விவசாயிகள் கடுமையான வறட்சிக்கு ஆளாகியுள்ள நிலையில், இப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரப் பகுதிகளில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்தும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

    மின் தேவையைக் கணக்கிட்டு தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை உருவாக்கி மின் உற்பத்தியை அதிகரிப்பதற்குப் பதிலாக, அறிவிக்கப்பட்ட திட்டங்களைக் கூட செயல்படுத்த முடியாத தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. மின்வெட்டே இல்லை எனக் கூறுவதைத் தவிர்த்து, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து மின்வெட்டைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai