Enable Javscript for better performance
உடல்உறுப்பு தானம் வலியுறுத்தி பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    உடல் உறுப்புதானத்தை வலியுறுத்தி மதுரையில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

      உடல் உறுப்புகளைத் தானம் செய்த மாணவர் இதேந்திரன் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமுத சுரபி கலைமன்றம் சார்பில் மதுரை மாநகராட்சி ஈவேரா.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இதேந்திரன் உருவப்படத்தை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா திறந்துவைத்தார். மன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவியர் கைகளில் மெழுகுவர்த்தி தீபம் ஏந்தி இதேந்திரன் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் உடல் உறுப்பு, ரத்தம், கண் தானம் செய்வோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஆண்டுதோறும் செப்.23 ஆம் தேதியை உடல்உறுப்பு தான தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

        பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மன்றத்தலைவர் வீ.பாலகிருட்டினன் தலைமை வகித்தார். அமைப்புச்செயலர் முரளி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai