Enable Javscript for better performance
சமையல் எண்ணெய் விலை திடீர் உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    இறக்குமதி வரி உயர்வால் பாமயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் விலை உயந்துள்ளது.

    பாமாயில் லிட்டருக்கு ரூ.1.50, சூரியகாந்தி எண்ணெய் லிட்டருக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

    கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பாமாயில் விலை லிட்டருக்கு ரூ.49.50ஆக இருந்தது. தற்போது இதன் விலை லிட்டருக்கு ரூ.51 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் விலை முன்பு ரூ.81 ஆக இருந்தது. தற்போது இதன் விலை ரூ.83 ஆக உயர்ந்துள்ளது.

    இது குறித்து மதுரை எண்ணெய் வணிகர்கள் கூறியதாவது: மத்திய அரசு சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை 5 சதவீதம் உயர்த்தியுள்ளது.

     இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. மற்ற சமையல் எண்ணெய்களின் விலையில் மாற்றமில்லை என்றனர்.

    கடலை எண்ணெய் லிட்டர் ரூ.140, தேங்காய் எண்ணெய் லிட்டர் ரூ.135, நல்லெண்ணெய் லிட்டர் ரூ.170, ரைஸ்பிரான் எண்ணெய் லிட்டர் ரூ.80 ஆக இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai