Enable Javscript for better performance
சுங்கச் சாவடி கட்டணத்தை தவிர்க்க குறுக்கு வழி: வாகனங்களை தடுத்து கிராமத்தினர் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    சுங்கச் சாவடி கட்டணத்தை தவிர்க்க குறுக்கு வழி: வாகனங்களை தடுத்து கிராமத்தினர் மறியல்

    By மேலூர்  |   Published on : 26th September 2015 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் கத்தப்பட்டி சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தவிர்க்க குறுக்கு வழியில் செல்லும் வாகனங்களை தடுக்கக் கோரி பெருமாள்பச்சி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

     நான்கு வழிச்சாலை கத்தப்பட்டி சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல் வெள்ளரிப்பட்டி தொழிற்சாலை வளாக சாலை வழியாக பெருமாள்பட்டி கிராமத்துக்குள் வந்து மீண்டும் சிட்டம்பட்டியில் நான்கு வழிச்சாலையில் செல்லலாம். இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பெருமாள்பட்டி வழியாகச் சென்றன. இதனால், குறுகலான கிராமச் சாலை குண்டும் குழியுமாகி சேதமடைந்துள்ளன.

     மேலும் பெருமாள்பட்டியில் வாகனங்கள் கால்நடைகள் மீது மோதி விபத்துகளும் நேரிடுவதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், கிராம மக்கள் திரண்டு வந்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

     தகவலறிந்த மேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, வாகனங்கள் குறுக்கு வழியில் வருவதை தடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai