Enable Javscript for better performance
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி விரைவில் போராட்டம்: ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி விரைவில் போராட்டம்: ஸ்டாலின்

    By வாடிப்பட்டி  |   Published on : 26th September 2015 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

     நமக்கு நாமே சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, அலங்காநல்லூருக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர் வாடிவாசல் பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடையே பேசியதாவது:

     தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பு  ஜல்லிக்கட்டுக்கு தடை வந்த போதெல்லாம் திமுக அரசு அதற்கு உரிய அனுமதியைப் பெற்று நடத்தியது. உச்சநீதிமன்றம் அமைத்த ஆய்வுக் குழு பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்டு சில பரிந்துரைகளை அளித்தது. நீதிமன்ற உத்தரவின்படி இப்போதைய அரசு, பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. இதன் காரணமாகவே தடைபட்டு விட்டது.  வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்த உரிய அனுமதியை அரசு பெற வேண்டும். இல்லையெனில் எனது தலைமையில் மதுரையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai