Enable Javscript for better performance
திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை: மேலூர் நீதிமன்றத்தில் 4 பேர் சரண்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை: மேலூர் நீதிமன்றத்தில் 4 பேர் சரண்

    By மேலூர்  |   Published on : 26th September 2015 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை தொடர்பாக மேலூர் நீதிமன்றத்தில் 4 பேர் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

     திண்டுக்கல்லைச் சேர்ந்த ராம்குமார் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இதற்குப் பழிக்குப்பழியாகஅதே பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜ் என்பவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக கடந்த செப்.14ஆம் தேதி வந்த போது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

     இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து 4 பேரைக் கைது செய்தனர். மேலும் போலீஸாரால் தேடப்பட்ட முத்துச்சாமி மகன் சண்முகம், ஊமையன் மகன் சிவநாத், முருகானந்தம் மகன் சிவா, முருகேசன் மகன் மைக்கேல் ஆகியோர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை மதுரை மத்திய சிறையில் காவலில் வைக்கவும் செப்.28ஆம் தேதி திண்டுக்கல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் மாஜிஸ்திரேட் கே.வி.மகேந்திரபூபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai